தமிழ்நாடு அரசு தேர்வுகள்

டிஎன்பிஎஸ்சி புகைப்படம் & கையொப்பம் அளவு மாற்றி (Group 4, Group 2, OTR)

TNPSC அறிவிப்பில் உள்ள அளவுக்கு உங்கள் புகைப்படத்தையும் கையொப்பத்தையும் crop, resize செய்யுங்கள் - கீழே பெயர், புகைப்பட தேதியுடன் - One Time Registration, online விண்ணப்பத்திற்கு தயாரான Photograph.jpg, Signature.jpg download செய்யுங்கள். TRB presets-ம் உண்டு.

இலவசம்Sign-up தேவையில்லைKailvex உருவாக்கியதுView in English
உங்கள் தகவல் பாதுகாப்பானது

நீங்கள் உள்ளிடும் தகவல்கள் உங்கள் browser-லேயே process ஆகும்; Kailvex சேமிப்பதில்லை. Password, card எண் போன்ற முக்கிய தகவல்களை உள்ளிட வேண்டாம்.

1. தேர்வை தேர்வு செய்யுங்கள்

2. Image தேர்வு செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ புகைப்படம், கையொப்பம் அளவுகள்

கடைசியாக சரிபார்த்தது: 9 அக்டோபர் 2026, கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புகளிலிருந்து. விதிகள் மாறலாம் - உங்கள் தேர்வின் அறிவிப்பை எப்போதும் சரிபாருங்கள்.

தேர்வுபுகைப்படம்கையொப்பம்ஆதாரம்
TNPSC
OTR, Group I, II, IV
130 × 170 px (3.5 × 4.5 cm)
20–50 KB · JPG · 200 DPI
கீழே 55 px-ல் பெயர் + தேதி
Photograph.jpg
230 × 75 px (6.0 × 2.0 cm)
10–20 KB · JPG · 200 DPI
நீலம் / கருப்பு மை
Signature.jpg
அறிவிப்பு எண் 11/2026 (Group IV, 06.10.2026); 11/2025 (Group II); 1/2024 (Group IV)
tnpsc.gov.in PDF · tnpsc.gov.in
TN TRB20–60 KB · JPG / JPEG / PNG
Pixel அளவு குறிப்பிடப்படவில்லை
10–30 KB (02/2025) அல்லது 10–40 KB (01/2025)அறிவிப்பு எண் 01/2025, 02/2025
trb.tn.gov.in
TNUSRB, TN MRBஅறிவிப்பில் இல்லை; online application portal-ன் instructions-ல் கொடுக்கப்படும். அந்த அளவுகளுடன் Custom option-ஐ பயன்படுத்துங்கள்.tnusrb.tn.gov.in · mrb.tn.gov.in

TRB pixels குறிப்பிடாததால் TRB presets passport விகிதத்தை (200 DPI-ல் 3.5 × 4.5 cm) பயன்படுத்துகின்றன. அதிகாரப்பூர்வ தளங்களில் மட்டும் விண்ணப்பியுங்கள்: tnpscexams.in.

எப்படி பயன்படுத்துவது

மூன்று படிகளில் TNPSC photo resize.

01

தேர்வு, photo/signature தேர்வு

TNPSC photo, TNPSC signature அல்லது வேறு preset. Pixels, KB அளவு தானாக நிரம்பும்.

02

Image தேர்வு செய்து சரிசெய்யுங்கள்

Studio photo அல்லது scan செய்த கையொப்பத்தை தேர்வு செய்து, இழுத்து, zoom செய்யுங்கள். Photo-க்கு பெயரும் புகைப்படம் எடுத்த தேதியும் type செய்யுங்கள்.

03

Download, upload

அளவை சரிபார்த்து Photograph.jpg அல்லது Signature.jpg download செய்து tnpscexams.in-ல் upload செய்யுங்கள்.

வழிகாட்டி

டிஎன்பிஎஸ்சி புகைப்படம், கையொப்பம் விதிகள் மற்றும் OTR-ல் upload செய்வது

புகைப்படம் அல்லது கையொப்பம் சரியான அளவில் இல்லாவிட்டால் TNPSC விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். Group IV (அறிவிப்பு எண் 11/2026, தேதி 06.10.2026), Group II (11/2025), Group IV (1/2024) - சமீபத்திய அறிவிப்புகளில் விதிகள் மாறவில்லை. மேலே உள்ள அட்டவணையில் அதிகாரப்பூர்வ PDF links உள்ளன.

புகைப்படம்

Studio-வில் வெள்ளை பின்னணியில் எடுத்த வண்ண passport size புகைப்படம்; இரண்டு காதுகளும் கழுத்தின் ஒரு பகுதியும் தெரிய வேண்டும். அறிவிப்பு தேதி அல்லது அதன் பிறகு எடுத்திருக்க வேண்டும்; கீழே பெயரும் புகைப்பட தேதியும் இருக்க வேண்டும். மொத்த அளவு 3.5 × 4.5 cm (130 × 170 pixels): மேலே 3.0 cm (115 pixels) முகம், கீழே 1.5 cm (55 pixels) பெயர், தேதி. Photograph.jpg, 20–50 KB, 200 DPI. Selfie, mobile photo, xerox, விழா/சுற்றுலா photos ஏற்கப்படாது.

கையொப்பம்

வெள்ளை தாளில் 6.0 × 2.0 cm பெட்டி வரைந்து நீலம் அல்லது கருப்பு pen-ல் கையொப்பமிட்டு 200 DPI-ல் scan செய்து பெட்டியை மட்டும் crop செய்யுங்கள். 230 × 75 pixels, 10–20 KB, Signature.jpg.

One Time Registration (OTR) படிப்படியாக

அதிகாரப்பூர்வ தளம் www.tnpscexams.in-ல் One Time Registration திறக்கவும். Aadhaar விவரம் கட்டாயம். விவரங்களை நிரப்பி, பதிவு கட்டணம் (சமீபத்திய அறிவிப்பின்படி ₹150) செலுத்தி Photograph.jpg, Signature.jpg upload செய்யுங்கள். OTR ஐந்து ஆண்டுகள் செல்லும்; ஆனால் அது விண்ணப்பம் அல்ல - ஒவ்வொரு தேர்வுக்கும் தனியாக விண்ணப்பிக்க வேண்டும், அந்த அறிவிப்பு தேதிக்குப் பிறகு எடுத்த photo-வுடன்.

முக்கியம்

புகைப்படம் உண்மையில் எடுத்த தேதியையே போடுங்கள். பழைய photo-க்கு புதிய தேதி போட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். Kailvex-க்கும் TNPSC, TRB, TNUSRB, MRB-க்கும் தொடர்பு இல்லை; விண்ணப்பிக்கும் முன் உங்கள் தேர்வின் அறிவிப்பை சரிபாருங்கள்.

கேள்விகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.

130 × 170 pixels (3.5 × 4.5 cm), 20 KB முதல் 50 KB, JPG, 200 DPI, Photograph.jpg - கீழே 55 pixels-ல் பெயர், புகைப்பட தேதி.

230 × 75 pixels (6.0 × 2.0 cm), 10 KB முதல் 20 KB, JPG, 200 DPI, Signature.jpg. வெள்ளை தாளில் நீலம்/கருப்பு pen.

இல்லை. உங்கள் browser-லேயே process ஆகும், device-ஐ விட்டு வெளியே போகாது.

சிறிய image குறைந்தபட்ச அளவுக்கு கீழே வரலாம். Tool முதலில் அதிக quality பயன்படுத்தும்; அப்போதும் குறைவாக இருந்தால் படத்தை மாற்றாமல் JPG file-க்குள் பாதிப்பில்லா padding சேர்க்கும்.

TNPSC studio photo கேட்கிறது; mobile, selfie photos upload செய்யக்கூடாது என அறிவிப்பு சொல்கிறது.

TRB அறிவிப்புகளில் KB வரம்பு உள்ளது (photo 20–60 KB, signature 10–30/40 KB), presets உண்டு. TNUSRB, MRB அளவுகள் அவர்களின் application portal-ல் இருக்கும்; அங்கே பார்த்து Custom-ல் கொடுங்கள்.

Kailvex Technologies

உங்கள் coaching centre-க்கு website வேண்டுமா?

Coaching centres, கல்வி நிறுவனங்களுக்கு website, admission CRM, online test platforms - Kailvex உருவாக்குகிறது.